நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 44.3 சதவீத ஓட்டுகளுடன், 37 இடங்களில் அ.தி.மு.க., வெற்றி பெற்று உள்ளது. இது, அந்த கட்சிக்கு கிடைத்து உள்ள வரலாறு காணாத வெற்றி. யாராலும் வெல்ல முடியாத, எம்.ஜி.ஆர்., இருந்தபோது கூட, லோக்சபா தேர்தலில், இத்தகைய வெற்றியை அந்த கட்சி பார்த்து இல்லை என, அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜெயலலிதா தலைமையில் இத்தகைய வெற்றி கிடைத்துள்ளது, அவருக்கும், அ.தி.மு.க.,விற்கும், தமிழக அரசியலில் மிகப்பெரிய ஏற்றத்தை தரும் என்ற கருத்து உருவாகி உள்ளது.
சாதனை
அ.தி.மு.க., 1972ம் ஆண்டு, 17ம் தேதி, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்டது. அது முதல், 11 லோக்சபா தேர்தல்களை, அந்த கட்சி தமிழகத்தில் சந்தித்திருக்கிறது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட சில மாதங்களிலேயே தமிழக சட்டசபைக்கு போட்டியிட்டு, எம்.ஜி.ஆர்., பெரும் வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தார். ஆனால், லோக்சபாவில் சொல்லிக் கொள்ளக் கூடிய அளவுக்கு அவர் வெற்றி பெற்றதில்லை.அதுவும், தமிழக அரசியலில், மிகப் பெரிய சக்தியாக பார்க்கப்பட்ட எம்.ஜி.ஆர்., 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் நடந்த லோக்சபா தேர்தல்களை சந்தித்தார். அந்த மூன்று தேர்தல்களிலும் தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்தே போட்டியிட்டார். 1977ல் 17 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றியடைந்தது. 1980ல் இரண்டு இடங்களிலும் 1984ல் 12 இடங்களிலும் வெற்றியடைந்த எம்.ஜி.ஆர்., கூட்டணியாக 45 சதவீத ஓட்டுகளுக்கு மேல் பெற்றதில்லை.ஆனால், எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக பதவியேற்று, கட்சியை நடத்தி வரும் ஜெயலலிதா, 1989, 1991, 1996, 1998, 1999, 2004, 2009, 2014 ஆகியஆண்டுகளில் நடந்த, எட்டு லோக்சபா தேர்தலை சந்தித்திருக்கிறார்.1989 முதல் 2009ம் ஆண்டு வரையில், அவர், எம்.ஜி.ஆர்., பார்முலாவின் படியே, தேசிய கட்சிகளோடு கூட்டணி வைத்தே, லோக்சபா தேர்தலை சந்தித்து வந்தார்.ஆனால், இப்போது நடந்த தேர்தலில் தான், அவர், யாருடனும் கூட்டணி அமைக்காமல், தனித்தே தேர்தலை சந்தித்தார். தமிழகத்தில் இருக்கும் அனைத்து தொகுதிகளுக்கும்அ.தி.மு.க., சார்பில் வேட்பாளர்களை நிறுத்தினார். அதில் அவருக்கு எதிர்பாராத அளவுக்கு வெற்றி கிட்டியிருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில், 37 தொகுதிகளில் வெற்றி பெற்று, அதிக இடங்களைப் பெற்றிருக்கும் மாநில கட்சிகளில், முதல் இடத்தை பெற்றிருக்கிறது அ.தி.மு.க., இதற்கு முன், தமிழகத்தில் இப்படியொரு வெற்றியை, எந்த கட்சியும் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல, தற்போது அ.தி.மு.க.,வுக்கு, 44.3 சதவீத ஓட்டு கிடைத்திருக்கிறது. எம்.ஜி.ஆர்., காலத்தில்கூட, இந்தளவுக்கு அதிக அளவிலான ஓட்டுகளை அ.தி.மு.க., பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தனித்து போட்டிதமிழகத்தில் நடந்த லோக்சபா தேர்தல் வரலாற்றை பார்க்கையில், ஜெயலலிதா வுக்கு முன், 1962ம் ஆண்டில், முன்னாள் முதல்வர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில், லோக்சபா தேர்தலில், தனித்துப் போட்டியிட்டு, 46.14 சதவீத ஓட்டுகளைப் பெற்றது தான், சாதனையாக இருந்து வருகிறது. அப்போது கூட, காங்கிரசுக்கு, 32 இடங்களில்தான் வெற்றி கிடைத்தது. வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கையை, முன் நடந்த தேர்தல்களோடு ஒப்பிடுகையில், ஜெயலலிதா தற்போது பெற்றிருக்கும் 37 தொகுதிகள் என்ற வெற்றிதான், சாதனையாககருதப்படுகிறது.து குறித்து அரசியல் ஆய்வாளர்கள் கூறியதாவது:தற்போது, ஜெயலலிதா, தனித்து நின்று பெற்றிருக்கும் வெற்றி என்பது, எம்.ஜி.ஆர்., கூட பெறாத வெற்றி தான். 44 சதவீத ஓட்டு என்பது சாதாரணமல்ல. கிட்டத்தட்ட பதிவான ஓட்டுகளில் பாதியளவுக்கு பெற்றிருக்கிறார். ஆனால், 1996ம் ஆண்டு தேர்தலில், ஐக்கிய முன்னணி கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசும், தி.மு.க.,வும் கூட்டணியாக இருந்து, 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற போது, பெற்ற 55 சதவீத ஓட்டுகள் தான், மிகப் பெரிய அளவிலான வெற்றியாக பார்க்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதாவின் தற்போதைய வெற்றி, தனித்து நின்று பெற்ற வெற்றி என்பதால், 1996 தேர்தல் முடிவை விட மகத்தானது. இதுவரை, காங்கிரசை தவிர, ஒரு கட்சியும் தமிழகத்தில் இத்தகைய சாதனையை படைத்தது இல்லை.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment